தொழிலாளர் சட்டத்தில் முக்கிய மாற்ற ஏற்படுத்திய மத்திய கிழக்கு நாடு
29 ஆடி 2023 சனி 07:28 | பார்வைகள் : 5253
மத்திய கிழக்கு நாடுகளில் சட்ட திட்டமானது கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஓமன் நாடானது தனது தொழிலாளர் சட்டத்தில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஓமன் ஆட்சியாளரான சுல்தான் ஹைதம் பின் தாரிக் குடிமக்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக தொழிலாளர் சட்டங்களை சீர்திருத்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.
திருத்தப்பட்ட இந்த தொழிலாளர் சட்டத்தில் ஆண்களுக்கான மகப்பேறு விடுப்பு, வேலை நேரத்தை எட்டு மணி நேரமாக கட்டுப்படுத்துவது உட்பட குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவரும்.
ஓமன் தொழிலாளர் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள்
ஓமன் நாட்டின் அரசு தனியார் துறையில் வேலை நேரம் இனி எட்டு மணி நேரமாக இருக்கும்.
இதில் ஓய்வு நேரம் சேர்க்கப்படவில்லை.
இரவில் வேலை செய்ய சிரமப்படுபவர்களும் காலை ஷிப்ட் தேர்வு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
இருப்பினும், அதற்கான காரணத்தை முதலாளியிடம் தெரிவிக்க வேண்டும்.
நோய்வாய்ப்பட்ட விடுப்பும் (Sick Leave) அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு ஊதியத்துடன் 98 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது.
ஆண்களுக்கும் ஏழு நாட்கள் மகப்பேறு விடுப்பு உண்டு.
மருத்துவமனையில் நெருங்கிய உறவினர்களுடன் செல்ல 15 நாட்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
பகுதி நேர வேலைகளும் அனுமதிக்கப்படுகின்றன.
நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குப் பிறகு மகப்பேறு விடுப்பு தேவைப்படுபவர்களும் ஒரு வருட ஊதியமில்லா விடுப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
25-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பணிபுரியும் ஒவ்வொரு பணியிடமும் ஓய்வு மையம் அமைக்க வேண்டும் என்றும் தொழிலாளர் சட்டம் கட்டாயமாக்குகிறது.