சீனாவின் டிராகன் ஆண்டு...! மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு
29 தை 2024 திங்கள் 10:10 | பார்வைகள் : 3862
சீனாவில் சரிவடைந்துள்ள மக்கள் தொகையை சீனாவின் டிராகனின் ஆண்டு மீண்டும் அதிகரிக்கும் என அந்நாட்டு மக்கள் தொகை சங்கத்தின் துணைத் தலைவர் யுவான் ஜிங் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் நம்பிக்கைப்படி, 12 ராசிகளின் சுழற்சியின் அடிப்படையில், சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் அந்த அறிகுறிகளைக் குறிக்கும் விலங்குகளின் பெயர்களால் அந்த ஆண்டை அழைக்கின்றனர்,
இந்த ஆண்டின் 2024 ராசி விலங்காக டிராகன் இருப்பதால், இந்த ஆண்டை சீனாவில் டிராகன் ஆண்டாக கொண்டுள்ளனர்.
மேலும், டிராகன் வருடத்தில் பிறக்கும் குழந்தைகள் குடும்பத்திற்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும் என்ற நம்பிக்கை சீன மக்களிடையே நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
சீனாவின் மக்கள் தொகை குறைந்து வருவது அந்நாட்டு அரசை கவலையடையச் செய்துள்ள நிலையில் பிறந்துள்ள இந்த ஆண்டு சீனாவில் புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
சீனாவின் தேசிய புள்ளியியல் பணியகத்தின் அறிக்கையின்படி, நாட்டின் மக்கள்தொகை 2022 உடன் ஒப்பிடும்போது 2023 இல் 2.08 மில்லியன் குறைந்துள்ளது,
தவிரவும் 2022 ஆம் ஆண்டில், சீனாவின் மக்கள் தொகையானது 850,000 ஆக குறைவடைந்துள்ளது.
இதற்கு முன்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு நாகத்தின் கடைசி ஆண்டாக இருந்த போதே அந்நாட்டின் மக்கள் தொகை கணிசமாக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.