Paristamil Navigation Paristamil advert login

சர்வதேச நீதிமன்றத்தை குற்றம் சாட்டும் இஸ்ரேல்

சர்வதேச நீதிமன்றத்தை குற்றம் சாட்டும் இஸ்ரேல்

29 தை 2024 திங்கள் 10:15 | பார்வைகள் : 2716


இஸ்ரேலுக்கு எதிராக தென்னாபிரிக்காவின் வழக்கு சர்வதேச நீதிமன்றத்தின் மீது வழக்கு தொடர்ந்து இருந்தது.

 தனது வார்த்தைகளை சர்வதேச நீதிமன்றம் தவறாக சித்தரித்துள்ளதாக இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் குற்றம் சாட்டியுள்ளார்.

காசாவில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வொன்றில் பங்கேற்று, உரையாற்றும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் இனப்படுகொலைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி தென்னாபிரிக்கா தாக்கல் செய்த மனு சர்வதேச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து, காசாவில் இனப்படுகொலைகள் இடம்பெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேல் எடுக்க வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கு தொடர்பில், இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் முன்வைத்த கருத்துக்கள் சர்வதேச நீதிமன்றத்தால் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒரு அடிப்படையற்ற சட்ட வாதத்தை ஆதரிக்கும் நோக்கத்துடன் தனது பகுதியளவான கருத்துக்களை மாத்திரம் நீதிமன்றம் பயன்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் குறித்த நடவடிக்கையை சர்வதேச நீதிமன்றம் முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்