Paristamil Navigation Paristamil advert login

பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனை: தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனை: தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

30 தை 2024 செவ்வாய் 01:49 | பார்வைகள் : 1469


சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி, தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத் துறை நான்கு வாரத்தில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது.

தி.மு.க., துணை பொதுச்செயலர் பொன்முடி, தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். இவர், 2006 - 11, தி.மு.க., ஆட்சியில் உயர் கல்வி மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது, தன் பெயரிலும், மனைவி விசாலாட்சி பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக, 1.75 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் குவித்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விடுவிப்பு

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவியை 2016ல் வழக்கில் இருந்து விடுவித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும், தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த மாதம் உத்தரவிட்டது.

ஜன., 22க்குள் விசாரணை நீதிமன்றத்தில் சரண் அடைய அவகாசம் அளித்தது. இதற்கிடையே உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்தார்.

அந்த விசாரணையின் போது, ஜன., 22க்குள் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து பொன்முடி மற்றும் அவருடைய மனைவிக்கு விலக்கு அளித்து, கடந்த 12ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், மூன்றாண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி, பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பொன்முடி மனு மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மார்ச் 4ம் தேதிக்குள் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.<br><br>அவசரம் வேண்டாம்

முன்னாள் அமைச்சர் பொன்முடி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ''பொன்முடி அமைச்சராகவும், எம்.எல்.ஏ.,வாகவும் இருந்தவர். லோக்சபா தேர்தல் நெருங்குவதால் அவருக்கு எதிரான தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்,'' என, முறையிட்டார்.

இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், 'அவசரம் வேண்டாம்; மேல்முறையீட்டு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்கட்டும். அதுவரை தண்டனையை நிறுத்திவைக்கப் போவதில்லை' எனக் கூறி இடைக்கால தடை விதிக்க மறுத்தது.

அதே நேரம், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி விசாரணை நீதிமன்றத்தில் சரண் அடைய அளிக்கப்பட்ட விலக்கை நீட்டித்த நீதிமன்றம், வழக்கை மார்ச் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்