அட்லியின் அடுத்த டார்கெட் டோலிவுட்டா?
30 தை 2024 செவ்வாய் 07:58 | பார்வைகள் : 11168
பாலிவுட்டில் முதல் படத்திலேயே ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்த இயக்குநர் அட்லியின் அடுத்தப் படம் குறித்தான அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழில் ‘ராஜா ராணி’, ‘மெர்சல்’, ‘தெறி’ போன்றப் படங்கள் மூலம் ஹிட் கொடுத்தவர் இயக்குநர் அட்லி. கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு படம் எடுக்கச் சென்றவர் தனது முதல் படத்திலேயே நடிகர் ஷாருக்கானை வைத்து ’ஜவான்’ இயக்கினார். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
கடந்த ஆண்டு பாலிவுட்டில் ஆயிரம் கோடி வசூல் செய்த படங்களில் ‘ஜவான்’ படமும் ஒன்று. இந்த நிலையில், அட்லியின் அடுத்தப் படம் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். ஷாருக்கான் - விஜய் என இருவரையும் ஒரே படத்தில் இயக்குவேன் என அட்லி தெரிவித்திருந்தார். ஆனால், விஜய் இப்போது படங்கள், அரசியல் கட்சி ஆகியவற்றில் மும்முரமாக இருப்பதால் அதற்கான சாத்தியக்கூறுகள் பற்றித் தெரியவில்லை.
இந்த நிலையில் தான், அட்லி டோலிவுட்டில் களமிறங்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் எப்படி ஷாருக்கானை வைத்து இயக்கியது போல, டோலிவுட்டில் அல்லு அர்ஜூனை வைத்து தனது முதல் படத்தை இயக்கப் போகிறார். அல்லு அர்ஜூன் ‘புஷ்பா2’ படத்தில் பிஸியாக இருக்கிறார். இதற்கடுத்து இயக்குநர்கள் சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் திரி விக்ரம் இயக்கத்தில் நடிக்கிறார். இதற்கடுத்தே அட்லி படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. இந்தப் படத்தின் கதை பணிகளில் அட்லி இப்போது பிஸியாக உள்ளார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan