பாடசாலைக்கு கைத்துப்பாக்கியுடன் சென்ற மாணவன்-கனடாவில் சம்பவம்
30 தை 2024 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 3234
கனடாவில் பாடசாலைக்கு கைத்துப்பாக்கி எடுத்துச் சென்ற மாணவனுக்கு பாடசாலை நிர்வாகமானது தண்டனை விதித்துள்ளது.
14 வயதான மாணவன் ஒருவன் லோட் செய்யப்பட்ட கைத்துப்பாக்கியை பாடசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளான்.
கனடாவின் சர்ரே பகுதியைச் சேர்ந்த மாணவனே இந்த செயலில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நண்பர்களுக்கு காண்பிக்கும் நோக்கில் குறித்த சிறுவன் துப்பாக்கியை எடுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாணவனுக்கு ஆறு மாதங்கள் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது 14 வயதான குறித்த சிறுவன் தனது 13ம் வயதில் இவ்வாறு பாடசாலைக்கு துப்பாக்கியுடன் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுவன் 9 மில்லிமீற்றர் கைத்துப்பாக்கி ஒன்றை பாடசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிறுவனின் தந்தை, சட்டரீதியான 25 துப்பாக்கிகள் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.