ரொறன்ரோவில் மோசடி கும்பலின் அட்டூழியம் - பொலிஸார் எச்சரிக்கை
30 தை 2024 செவ்வாய் 08:16 | பார்வைகள் : 2619
கனடாவின் ரொறன்ரோவில் வீடு வீடாக சென்று ஒரு கும்பல் பாரியளவில் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சிக் கிட்ஸ் ( SickKids Foundation ) என்ற அறக்கட்டளைக்காக நிதி திரட்டும் போர்வையில் இந்த மேசாடி இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போலியான கும்பல் ஒன்று நன்கொடைகளை திரட்டி வருவதாக பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.
மெய்hயன சிக் கிட்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள் தங்களது பெயர், அடையாள இலக்கம் மற்றும் கியூ.ஆர் இலக்கம் என்பனவற்றை சமர்ப்பிப்பார்கள் என தெரிவித்துள்ளனர்.
கியூ.ஆர் கோர்ட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் விபரங்களை அறிந்து கொள்ள முடியும் என அறிவித்துள்ளனர்.
வீடுகள், பொதுமக்கள் குடியிருப்புக்களில் தமது நிறுவனம் நிதி திரட்டப் போவதில்லை எனவும் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நிறுவனத்தின் இணைய தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கு இடமான நபர்கள் தொடர்பில் 416-808-2222 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.