5 நிமிடங்களில் சார்ஜ் செய்யக்கூடிய EV Battery - புதிய லித்தியம் பேட்டரியை உருவாக்கிய ஆராய்ச்சி குழு
30 தை 2024 செவ்வாய் 08:53 | பார்வைகள் : 2086
5 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யக்கூடிய EV பேட்டரியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க தற்போது உலக நாடுகள் அனைத்தும் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை குறைக்க முயற்சி செய்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்குப் பதிலாக படிப்படியாக மின்சார வாகனங்கள் (Electric Vehicle) கிடைக்கின்றன.
இருப்பினும், பேட்டரிகளை சார்ஜ் செய்ய எடுக்கும் நீண்ட நேரம் மின்சார வாகனங்களின் பயன்பாட்டிற்கு பெரும் தடையாக உள்ளது.
இந்தப் பிரச்னையைத் தீர்க்க, அமெரிக்காவின் Cornell University பேராசிரியர் Lynden Archer தலைமையிலான ஆய்வுக் குழு புதிய லித்தியம் பேட்டரியை உருவாக்கியுள்ளது.
வெறும் 5 நிமிடங்களில் சார்ஜ் செய்து விடலாம் என்பது இதன் சிறப்பு.
இந்த பேட்டரி கிடைக்கும் பட்சத்தில், EV சார்ஜ் செய்ய மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை தவிர்க்கப்பட்டு, மின்சார வாகனங்களின் பயன்பாடு வேகம் பெறும்.
உண்மையில், மின்சார வாகனத் துறையில் தொழில்நுட்பம் ஏற்கனவே ஓரளவு முன்னேறியுள்ளது. தற்போது கிடைக்கும் வேகமான வணிக சார்ஜர்களைப் பயன்படுத்தி EVஐ சார்ஜ் செய்ய சுமார் 30 நிமிடங்கள் ஆகும்.
வீடுகளில் பயன்படுத்தப்படும் பொதுவான சார்ஜரை விட இது மிகவும் சிறந்தது என்றாலும், EVகளின் பயன்பாட்டை அதிகரிக்க மேலும் மேம்பாடுகள் தேவை.
வெறும் 5 நிமிடங்களில் EV பேட்டரியை சார்ஜ் செய்ய முடிந்தால், 300 மைல்கள் பயணிக்க தேவையான பாரிய பேட்டரி தேவையில்லாமல், மலிவான பேட்டரியைக் கொண்டு செய்யலாம், இது மின்சார வாகனங்களின் விலையைக் குறைக்கும் மற்றும் நுகர்வு அதிகரிக்கும் என்று Lynden Archer விளக்கினார்.