பிரித்தானிய ஜனத்தொகை தொடர்பில் ஆய்வில் தகவல்...
30 தை 2024 செவ்வாய் 12:45 | பார்வைகள் : 3174
பிரித்தானியாவில் 2036 ஆம் ஆண்டின் மத்தியில் புலம்பெயர் மக்களால் நாட்டின் ஜனத்தொகையில் 6.1 மில்லியன் அதிகரிக்கலாம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பொதுத்தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் பிரதமர் ரிஷி சுனக் நிர்வாகத்திற்கு இந்த ஆய்வு முடிவுகள் அழுத்தம் தரலாம் என்று கூறப்படுகிறது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2021 மத்தியில் 67 மில்லியனாக இருந்த பிரித்தானிய ஜனத்தொகை, எதிர்வரும் 2036 மத்தியில் 73.7 மில்லியனாக இருக்கலாம் என்று கணித்துள்ளது.
இது முழுமையாக புலம்பெயர் மக்கள் காரணமாகவே இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்த 15 ஆண்டுகளில் இறப்பை விடவும் பிறப்பு 541,000 என இருக்கும் என்றும், நிகர சர்வதேச புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை 6.1 மில்லியன் என்றும் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில் வெளியான தரவுகளின் அடிப்படையில் 2022ல் பிரித்தானியாவிற்கு நிகர இடம்பெயர்வு 745,000 என்ற சாதனையை எட்டியது.
மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியத்திற்குப் பதிலாக இந்தியா, நைஜீரியா மற்றும் சீனா உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏராளமான புலம்பெயர்ந்தோர் வருவாதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும், 2026ல் பிரித்தானிய ஜனத்தொகையானது 70 மில்லியனை எட்டும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.