RSA பெறுபவர்கள் கட்டாயம் 15மணி நேரம் வேலை செய்திருக்க வேண்டும் பிரதமர் Gabriel Attal,

30 தை 2024 செவ்வாய் 16:51 | பார்வைகள் : 10889
பிரான்சில் வேலையில்லாது இருப்போர், முழுநேர வேலை செய்யாதோர்க்கு அரசு வழங்கும் உதவித்தொகையை (RSA) பெற்றுக்கொள்ள, இனிவரும் காலங்களில் 15 மணிநேரம் கட்டாய வேலை செய்திருக்க வேண்டும் என்று, பிரதமர் இன்று நாடாளுமன்றத்தில் தனது கொள்கைப் பிரகடன உரையில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பதினெட்டு 'départements' மாவட்டங்களில் இந்த நடைமுறையை செயல்படுத்தி பரீட்சார்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என தெரிவித்துள்ள பிரதமர், இவ்வாண்டு இறுதிக்குள் சகல மாவட்டங்களுக்கும் இது பரந்துபட்டு. செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டுக்கு முன்னர் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகள் நடைமுறைக்கு வராது என ஏற்கனவே தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்திருந்த நிலையில் பிரதமர் இன்று தனது உரையில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1