இல் து பிரான்சைச் சேர்ந்த பயணிகளுக்கு இழப்பீடு! - மாகாண முதல்வர் அறிவிப்பு!

31 தை 2024 புதன் 07:00 | பார்வைகள் : 9592
இல் து பிரான்சைச் சேர்ந்த நவிகோ பயனாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளதாக மாகாண முதல்வர் Valérie Pécresse தெரிவித்துள்ளார்.
RER B, RER C RER D மற்றும் Transilien P வழிச் சேவைகளில் பயணிக்கும் பயணிகளுக்கே இந்த இழப்பீடு வழங்கப்பட உள்ளது. 2023 ஆம் ஆண்டில் மேற்குறித்த சேவைகள் காலதாமதமாகவும், சரியான நேரத்தை விட தாமதமாகவும் பயணித்திருந்தன. அதற்காக இழப்பீடு தான் வழங்கப்பட உள்ளது.
“இழப்பீடு வழங்கப்படவேண்டிய தொகையை நாம் கணக்கிட்டு வருகிறோம். ஒவ்வொரு வழிச் சேவைகளின் பாதிப்புக்களையும் கணக்கிட்டு அதற்கு ஏற்றால் போல் இழப்பீடு வழங்கப்படும்” என மாகாண முதல்வர் Valérie Pécresse தெரிவித்தார்.