பரிசை நெருங்கும் உழவு இயந்திரங்கள்! - Rungis சந்தைக்கு கவசவாகனங்களுடன் பலத்த பாதுகாப்பு!!
31 தை 2024 புதன் 07:15 | பார்வைகள் : 3778
விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வலுத்து வரும் நிலையில், தலைநகர் பரிசை முடக்கும் நோக்கில் அதனை நோக்கி பல நூறு உழவு இயந்திரங்கள் படையெடுத்துள்ளன.
இன்று காலை நிலவரப்படி, புறநகர் பரிசின் பல்வேறு வீதிகள் முடக்கப்பட்டுள்ளன. ஓர்லி விமான நிலையத்துக்கு அருகே Chilly-Mazarin (Essonne) நகரை அண்மித்த A6 நெடுஞ்சாலையிலும், A10 நெடுஞ்சாலையிலும் 200 தொடக்கம் 300 வரையான உழவு இயந்திரங்கள் ஊர்ந்து சென்று போக்குவரத்தை முடக்கியுள்ளன.
அதேவேளை, Rungis தேசிய சந்தையினை சுற்றி காவல்துறையினர் மற்றும் கவச வாகனங்களைக் கொண்ட இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சந்தையுன் அன்றாட செயற்பாடுகள் தடைப்படாமல் இருக்க வேண்டிய நடவடிக்கை அனைத்தும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.