Paristamil Navigation Paristamil advert login

ஐரோப்பாவில் பிரபல கால்பந்து அணிக்கு தடை விதிப்பு

ஐரோப்பாவில்   பிரபல கால்பந்து அணிக்கு தடை விதிப்பு

29 ஆடி 2023 சனி 09:15 | பார்வைகள் : 4209


அடுத்த ஐரோப்பிய தொடரில் பிரபல இத்தாலிய கால்பந்து அணி  ஜுவென்டஸ்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தாலிய கால்பந்து அணி  ஜுவென்டஸ் நிதி தொடர்பான விதிகளை மீறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி, ஐரோப்பாவின் கால்பந்து நிர்வாகம் பெருந்தொகை அபராதம் விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மொத்தமாக 17.15 மில்லியன் பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொகையில் பாதி நிபந்தனைக்கு உட்பட்டது என்றே கூறப்படுகிறது.

2019 மற்றும் 2021 க்கு இடையில் விளையாட்டு வீரர்களை பதிவு செய்துள்ளதுடன் தொடர்புடையவை இந்த விதி மீறல்கள் என்றே தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், UEfa நிர்வாகத்தால் டிசம்பர் மாதம் அதிகாரப்பூர்வ விசாரணை முன்னெடுக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு வருந்தவைக்கும் ஒன்று என குறிப்பிட்டுள்ள ஜுவென்டஸ் தலைவர் Gianluca Ferrero,

எங்கள் செயல்களின் நியாயத்தன்மை மற்றும் எங்கள் வாதங்களில் செல்லுபடியாகும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றார்.

மேலும் தடை விதித்துள்ளதை ஏற்பதாகவும், மேல்முறையீடு செய்ய விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்