Paristamil Navigation Paristamil advert login

கனடாவில்  சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மூடும் அபாயம்!

கனடாவில்  சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மூடும் அபாயம்!

31 தை 2024 புதன் 08:21 | பார்வைகள் : 4769


கனடாவில் அல்பெர்ட்டா மாகாணத்தின் பல சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

அதாவது  பெற்றோருக்கு இது தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நிதி நெருக்கடி நிலைமைகளினால் பல்வேறு சிறுவர் பராமரிப்பு நிலையங்களை மூட நேரிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அல்பெர்ட்டா சிறுவர் பராமரிப்பு முயற்சியான்மையாளர்கள் என்ற அமைப்பு இந்த பெற்றோருக்கு அறிவித்துள்ளது.

மத்திய அசராங்கத்தின் நாளொன்றுக்கு 10 டொலர்கள் என்ற திட்டத்தில் நிலவி வரும் குளறுபடிகள் தொடர்பில் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

நிதி வழங்குவதற்கு கூடுதல் காலம் எடுத்துக் கொள்ளப்படுவதாக சிறுவர் பராமரிப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுவர் பராமரிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறு கடிதங்கள் அனுப்பி வைப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். 

வர்த்தக‌ விளம்பரங்கள்