ஆண்டொன்றுக்கு 42,000 மாணவர்கள் 'd'asthme' ஆஸ்துமா நோயாளிகளாக மாறக் காரணம் பாடசாலைகள்.
31 தை 2024 புதன் 09:02 | பார்வைகள் : 3316
பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் 6 வயதில் இருந்து 11 வயது வரையான சுமார் 42,000 'd'asthme' ஆஸ்துமா நோயாளர்கள் உருவாக காரணமாக இருப்பது அவர்களின் பாடசாலைகளின் பொருட்களும், வகுப்பறைகளின் மாசுபாடடைந்த காற்றுமே என (Santé publique France) பிரான்சின் பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
வகுப்பறைகளில் காணப்படும் தளபாடங்கள், பூசப்பட்ட வர்ணங்கள், பாவிக்கப்படுகிற உபகரணங்கள், சேமித்து வைக்கப்படும் காகிதக் கட்டுகள் என்பன சரியாகப் பரமரிக்கப்படுவதில்லை, மூடப்பட்ட அறைகளாக வகுப்பறைகள் இருப்பதும், அதனுடைய சாளரங்கள் திறக்கப்படாமல் தொடர்ச்சியாக மூடப்பட்டிருப்பதும், இதற்கு காரணம் என்றும் வெளிப்புற காற்று உள்ளே நுழையாது இருப்பதும் மாசடைதலுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
கல்வித் துறையினரும் ஆசிரியர்களும் இதன் மேல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பாடசாலையினுடைய உபகரணங்கள் அடிக்கடி மாற்றப்பட வேண்டும் என்றும் பிரான்சின் பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேல் குறிப்பிட்ட வயதெல்லை உடைய மாணவர்கள் தமது வாழ்நாளில் அதிக நேரத்தை வகுப்பறைகளில் கழிப்பதினால் அவர்கள் இந்த நோய்க்கு ஆளாகிறார்கள் என்றும் அவர்களை அதிலிருந்து காப்பாற்ற மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பொது சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது.