Paristamil Navigation Paristamil advert login

ஆங்கிலக்கடலில் பயணிக்கும் அகதிகளை கண்காணிக்க புதிய நவீன கருவிகள்!

ஆங்கிலக்கடலில் பயணிக்கும் அகதிகளை கண்காணிக்க புதிய நவீன கருவிகள்!

31 தை 2024 புதன் 10:57 | பார்வைகள் : 3448


பிரான்சில் இருந்து கடல்மார்க்கமாக பிரித்தானியாவுக்குச் செல்லும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறமை அறிந்ததே. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சிறிய படகுகளில் மேற்கொள்ளப்படும் இந்த பயணங்களினால் பல உயிரிழப்புகளும் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், இந்த பயணங்களை தடுப்பதற்கு கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் UK-EU ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டிருந்தது. அகதிகள் வருகையால் பெரிதும் பாதிக்கப்படும் பிரித்தானியா, 500 மில்லியன் யூரோக்களை பிரான்சுக்கு வழங்கியிருந்தது. அத்துடன் பல நவீன கருவிகளையும் வழங்குவதாக உறுதியளித்திருந்தது.

அதையடுத்து, நேற்று ஜனவரி 30 ஆம் திகதி பிரான்சின் உள்துறை அமைச்சர் Gérald Darmanin இனை  தொடர்புகொண்ட பிரித்தானிய உள்துறை அமைச்சர் James Cleverly, பிரான்சில் இருந்து பிரித்தானியாவுச் வரும் படகுகளை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது தொடர்பில் உரையாடியுள்ளதாக அறிய முடிகிறது.

வான்வழி கண்காணிப்பு கருவிகள் விரைவில் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்