Paristamil Navigation Paristamil advert login

யாழில் சிறையில் இருந்து விடுதலையான இளைஞன் திடீர் உயிரிழப்பு

யாழில் சிறையில் இருந்து விடுதலையான இளைஞன் திடீர் உயிரிழப்பு

31 தை 2024 புதன் 11:39 | பார்வைகள் : 4976


யாழ்ப்பாணம் - நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த கணேஷ் நிசாந்தன் என்ற  இளைஞன், சந்தேகத்திற்கிடமான முறையில் செவ்வாய்க்கிழமை (30)  உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட,  இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த குறித்த இளைஞன் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி, விடுவிக்கப்பட்டுள்ளார். 

இளைஞனின் திடீர் உயிரிழப்பில்  சந்தேகம் நிலவுகின்றதுடன், இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்