Paristamil Navigation Paristamil advert login

வலிப்புவந்து துடித்த இளம்பெண்ணை கேலி செய்த பொலிசார்...

வலிப்புவந்து துடித்த இளம்பெண்ணை கேலி செய்த பொலிசார்...

31 தை 2024 புதன் 12:08 | பார்வைகள் : 2915


இங்கிலாந்தில், இளம்பெண் ஒருவருக்கு வலிப்புவந்து அவர் துடித்துக்கொண்டிருந்தபோது அவரது ஆடை விலக, அவரது உடலை பொலிசார் கேலி செய்தது தொடர்பான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

கடந்த ஆண்டு, இங்கிலாந்திலுள்ள, Berkshire என்னுமிடத்தில் இளம்பெண் ஒருவர் யாரையோ தாக்கியதாக சந்தேகத்தின்பேரில் அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இரவு நேரத்தில் அந்த 22 வயது இளம்பெண்ணக் கைது செய்த பொலிசார், அவரை வேனில் ஏற்றிச் செல்லும்போது, திடீரென அந்த இளம்பெண்ணுக்கு வலிப்பு வந்துள்ளது. 

கைகால்கள் இழுத்துக்கொள்ள அவர் துடிதுடித்துக்கொண்டிருக்கும்போது, அவரது உடை விலகியுள்ளது.

இந்தக் காட்சிகள் அவரைக் கைது செய்த பொலிசார் அணிந்திருந்த கமெராவில் பதிவாகியுள்ளன. 

அந்த வேனில் ஒரு பெண் பொலிசாரும், பொலிஸ் பயிற்சி பெறும் மாணவர் ஒருவரும் மற்றொரு ஆண் பொலிசாரும் இருந்துள்ளார்கள்.

அந்தப் பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். பின்னர் அவர் குற்றவாளியே அல்ல, அவர்தான் தாக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அன்று மாலை, அந்த பெண் பொலிசார், தனது கமெராவில் பதிவான காட்சியை தனது லாப்டாப்பில் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார். 

உடனே மூன்று ஆண் பொலிசாரும், அவருடன் இணைந்துகொண்டுள்ளார்கள்.

அவர்கள், அந்தப் பெண்ணின் மார்பைக் குறித்து மோசமாக விமர்சித்ததுடன், பொலிசாரில் ஒருவர் அவரது அந்தரங்கத்தைப் பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் மேலும் ஒரு ஆண் பொலிசாரும் அவர்களுடன் இணைந்துகொள்ள, இந்தப் பெண்ணுடன் உடல்ரீதியாக உறவு கொள்ள எவ்வளவு பணம் கொடுக்கலாம் என அவர் கேட்க, ஒருவர் 500,000 பவுண்டுகள் கொடுக்கலாம் என்றும், மற்றொருவரோ, 250 பவுண்டுகள் போதும் என்றும் கூறி கேலி செய்து அனைவரும் சிரித்துள்ளார்கள்.

சம்பவம் நடந்தபோது உடன் இருந்த பொலிஸ் பயிற்சி மாணவர் இந்த விடயம் குறித்து புகாரளிக்க, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பொலிசாராக பணியாற்ற அவருக்கு தகுதி இல்லை என்று கூறி அவரை பணிநீக்கம் செய்துள்ளார்கள்.

இந்த விடயம் குறித்து அறிந்த பிரித்தானிய ஊடகம் ஒன்று, பாதிக்கப்பட்ட பெண்ணைத் தேடிக்கண்டுபிடித்துள்ளது. 

அவர் அந்த பொலிசாருக்கு தண்டனை வழங்கப்படவேண்டும் என கோர, தற்போது பொலிஸ் ஒழுங்கு முறை அமைப்பு இந்த அதிரவைக்கும் சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்