Rungis சந்தைக்குள் நுழைய முற்பட்ட 18 விவசாயிகள் கைது!!

31 தை 2024 புதன் 13:08 | பார்வைகள் : 8040
இல் து பிரான்சுக்கான மிகப்பெரிய மொத்த வியாபார சந்தையான Rungis இனை முற்றுகையிட முற்பட்ட 18 விவசாயிகள் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.
Rungis சந்தையை முடக்கும் முயற்சியில் கடந்த இரு நாட்களாக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கவச வாகனங்களை நிறுத்தி காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று புதன்கிழமை காலை தடையையும் மீறி சந்தைக்குள் நுழைந்த போராட்டக்குழுவினர் சந்தையின் அன்றாட செயற்பாடுகளை தடுக்க முற்பட்டனர்.
பின்னர் அவர்களை அங்கிருந்து வெளியேற்ற முற்பட்ட போது இரு தரப்புக்கும் இடையே கைலப்பு ஏற்பட்டது. அதையடுத்து அவர்களில் 18 பேரினை காவல்துறையினர் கைது செய்தனர்.