79 விவசாயிகள் கைது!

31 தை 2024 புதன் 18:36 | பார்வைகள் : 9631
Rungis சந்தையை முற்றுகையிட்ட 79 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக சற்று முன்னர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Rungis (Val-de-Marne) சந்தையில் இன்று புதன்கிழமை காலை பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், நண்பகலின் பின்னர் நுழைந்த விவசாயிகள் அங்கிருக்கும் பொருட்களை சேதமாக்க முற்பட்டதாக அறியமுடிகிறது. அதையடுத்து காவல்துறையினர் தலையிட்டு பலரைக் கைது செய்துள்ளனர்.
79 பேர் கைது செய்யப்பட்டதாக அறிய முடிகிறது.
திங்கட்கிழமை நண்பகல் முதல் விவசாயிகள் ஓர்லி விமான நிலையத்தையும், Rungis சந்தையினையும், இல் து பிரான்சின் பிரதான நெடுஞ்சாலைகளையும் முடக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025