கல்விச் செயற்பாடுகள் முடக்கம் - 40% சதவீத ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்!
1 மாசி 2024 வியாழன் 06:00 | பார்வைகள் : 4030
இன்று பெப்ரவரி 1 ஆம் திகதி, வியாழக்கிழமை ஆசிரியர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட உள்ளதை அடுத்து கல்விச் செயற்பாடுகள் தடைப்பட உள்ளன.
கிட்டத்தட்ட அனைத்து ஆசிரியர் தொழிற்சங்கங்களும் இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. வேலை நிறுத்ததுடன் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் ஈடுப உள்ளனர்.
தங்களுக்கு போதிய ஊதியம் வழங்கப்பட வில்லை எனவும், புதிய வரவுசெலவுத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் பரிசில் 60% சதவீத ஆசிரியர்களும், நாடு முழுவதும் 40% சதவீத ஆசிரியர்களும் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர். பரிசில் இன்று 130 பாடசாலைகள் மூடப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.