Paristamil Navigation Paristamil advert login

ஊழல் ஒழிப்பு, வாரிசு அரசியல் ஒழிப்புக்காக பணியாற்றுகிறோம்: நிர்மலா

ஊழல் ஒழிப்பு, வாரிசு அரசியல் ஒழிப்புக்காக பணியாற்றுகிறோம்: நிர்மலா

1 மாசி 2024 வியாழன் 06:20 | பார்வைகள் : 1487


சீர்திருத்தம், செயலாக்கம், மாற்றம் - இதுதான் அரசின் தாரக மந்திரம்  என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.<br><br>மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

*அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

*80 கோடி பேருக்கு இலவச ரேசன் உணவு பொருட்கள் சென்றுள்ளன.

*ஒவ்வொரு வீடுக்கும், ஒவ்வொரு தனி நபருக்கும் என திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன.

*சமூக நீதியை அரசின் கொள்கையாக கொண்டு செயல்படுத்தி வருகிறோம்.  சமூக நீதி அரசியல் வாக்கியமாக இருந்ததை திட்டங்களுக்கான மந்திரமாக மாற்றியுள்ளோம்.

*ஊழல் ஒழிப்பு, வாரிசு அரசியலை ஆகியவற்றை எதிர்த்து  பணியாற்றுகிறோம்.

*அனைவருக்கும் வங்கி கணக்கு, அனைவருக்கும் சமையல் எரிவாயு வழங்கி உள்ளோம்

*25 கோடி பேர் வறுமையில் இருந்து கடந்த 10 ஆண்டுகளில் மீட்கப்பட்டு உள்ளனர்.

*நாட்டில் 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம்.

*வீடுகளுக்கு குடிநீர் அனைவருக்கும் கேஸ் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.

*எங்கள் அரசு யாரையும் ஒதுக்காமல் அனைவரையும் அரவணைக்கும் அரசாக உள்ளது

*மின்னணு வேளாண் சந்தயால் 8 கோடி விவசாயிகள் பலன் பெற்றுள்ளனர்.

*34 லட்சம் கோடி உதவித்தொகை நேரடியாக ஏழைகளின் ஜன்தன் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது.

*11.8  கோடி விவசாயி அரசின் திட்டங்களினால்  பலன் பெற்றுள்ளனர்.

*விவசாயத்திற்கு மத்திய அரசு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறது.

*இந்திய கல்வித்துறையில் தேசிய கல்விக்கொள்கை பெரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது<br>*ஏழைகளின் முன்னேற்றமே நாட்டின்முன்னேற்றமாக செயல்படுகிறோம்

*பெண்கள் உயர்கல்வி படிப்பது 10 ஆண்டுகளில் 28 சதவீதம் அதிகரித்துள்ளது.

*78 லட்சம் தெருவோர வியாபாரிகள் அரசின் திட்டங்களினால் பலன் அடைந்துள்ளனர்.

*விலைவாசி கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

*10 ஆண்டுகளில் 7 ஐஐடி 19 எய்ம்ஸ் 330 பல்கலைகள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. 

*பிரதமர் காப்பீடு திட்டம் மூலம் 4 கோடி விவசாயிகள் பலன் பெற்றனர்.

*பெண்களுக்கான இட ஒதுக்கீடு, முத்தலாக் தடை சட்டத்தினால் பெண்கள் பயன் அடைந்துள்ளனர்.

*பெண்கள் தொழில்துவங்க முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.30 கோடி வரை கடன் வழங்கப்பட்டு உள்ளது

*அனைத்து துறைகளிலும் சிறு பொருளாதாரம் வலுவுடன் உள்ளது

*1.1 கோடி இளைர்கள் திறன் இந்தியா திட்டத்தின் பயிற்சி பெற்றுள்ளனர். 

*சீர்திருத்தம், செயலாக்கம், மாற்றம் - இதுதான் அரசின் தாரக மந்திரம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்