யாழில் ஹெரோயின் பாவனையால் இளைஞனுக்கு நேர்ந்த கதி
1 மாசி 2024 வியாழன் 06:52 | பார்வைகள் : 12033
அதிக ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இருபாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த கணேசன் நிஷாந் என்ற 29 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் நேற்று முன்தினம் இரவு உணவருந்தி விட்டு தூக்கத்துக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் உள்ளவர்கள் நேற்று அதிகாலை 4 மணியளவில் அவரை அவதானித்தவேளை அவர் அசைவற்று காணப்பட்டார்.
காலை 5 மணியளவில் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உடற்கூற்று பரிசோதனைகளின்போது, அவர் அதிக ஹெரோயின் பாவனை காரணமாக உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.


























Bons Plans
Annuaire
Scan