Paristamil Navigation Paristamil advert login

சோலார் பேனல் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்: பட்ஜெட்டில் அறிவிப்பு

சோலார் பேனல் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்: பட்ஜெட்டில் அறிவிப்பு

1 மாசி 2024 வியாழன் 07:51 | பார்வைகள் : 1678


1 கோடி வீடுகளில் மொட்டை மாடியில் சோலார் பேனல் அமைத்தால் மாதத்திற்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம் என மத்திய இடைக்கால பட்ஜெட்டில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன்மூலம் மாதம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை வருமானம் ஈட்டலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று (பிப்.,1) இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் தாக்கல் செய்தார். அதில் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற அடுத்த 5 ஆண்டுகளில் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், அடுத்த 5 ஆண்டுகள் வளர்ச்சிக்கானது எனவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.


பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:


* அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டித்தரப்படும்.

* 1 கோடி வீடுகளில் மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் மாதத்திற்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம்

* நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரிகளை அதிகரிப்பது தொடர்பாக தனிக்குழு அமைக்கப்படும்

* ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்ய புதிய செயலி அறிமுகம் செய்யப்படும்.

* கர்ப்பப்பை கேன்சரை தடுக்க 9 முதல் 14 வயதுள்ள பெண்களுக்கு தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

ரூ.1 லட்சம் கோடி

* ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

* மீன்வளத்துறையில் 55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

* ஆஷா, அங்கன்வாடி பணியாளர்களுக்கு காப்பீடு திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

* நாடு முழுவதும் 41 ஆயிரம் ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் தரத்திற்கு உயர்த்தப்படும்.

* சரக்கு ரயில் போக்குவரத்துக்காக பிரத்யேகமாக வழித்தடங்கள் செயல்படுத்தப்படும்.

* மெட்ரோ ரயில் திட்டங்கள் மேலும் பல நகரங்களுக்கு விரிவுப்படுத்தப்படும். 

சுற்றுலா

* நாட்டில் உள்ள விமான நிறுவனங்கள் புதிதாக 1000 விமானங்கள் வாங்க உள்ளன. 

* உதான் திட்டத்தில் புதிதாக 517 தடங்களில் மலிவு விலை விமான சேவை துவங்க திட்டம்.

* லட்சத்தீவை பிரதான சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

* சுற்றுலாத்துறையை மேம்படுத்த வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும்.

* ஆன்மிக சுற்றுலாவுக்கு பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

நிதி பற்றாக்குறை

* 2023-24ல் திருத்தப்பட்ட மதிப்பீட்டின் படி அரசின் செலவு ரூ.40.90 லட்சம் கோடி.

* 2024-2025ல் நாட்டின் நிதி பற்றாக்குறை 5.1 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும்.

* 2025-26ம் ஆண்டிற்குள் நிதி பற்றாக்குறை 4.5 சதவீதத்திற்கும் கீழ் குறைக்க திட்டம்.

* 10 ஆண்டுகளில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2.4 மடங்கு அதிகரித்துள்ளது.

பாதுகாப்புத்துறை

* பாதுகாப்புத்துறையில் முதலீடு 11.1 சதவீதமாக உயர்த்தி 11,11,111 கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும். 

* பாதுகாப்புத்துறையில் முதலீடு மொத்த உள்நாட்டு வளர்ச்சியான ஜிடிபி.,யில் 3.4 சதவீதமாக இருக்கும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்