உக்ரைனில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மமான மயானம்
1 மாசி 2024 வியாழன் 08:18 | பார்வைகள் : 2272
உக்ரைனில் அகழ்வாராய்ச்சியின் போது ஆயிரம் ஆண்டுகள் பழமையான மர்மமான கல்லறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பழங்காலத் தளத்தில் அகழ்வாராய்ச்சியின் போது 1,000 ஆண்டுகள் பழமையான கல்லறையைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கல்லறையில் காணப்படும் எலும்புக்கூடுகள் அந்த காலத்தில் மக்கள் இறந்த பிறகு எவ்வாறு அலங்கரிக்கப்பட்டு புதைக்கப்பட்டார்கள் என்பதைக் காட்டுகிறது.
ஆச்சரியப்படும் விதமாக, சில எலும்புக்கூடுகள் மர வாளியுடன் (Bucket) கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டன.
வல்லுநர்கள் இந்த கல்லறையைப் பற்றி ஆராய்ந்து நிறைய விடயங்களை தெரிந்துகொண்டுள்ளனர் மற்றும் இந்த வாளியின் மர்மம் பற்றி ஊகித்துள்ளனர்.
உக்ரைனில் தலைநகர் கீவ் அருகே காணப்படும் இந்த கல்லறை சுமார் 1,000 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது.
இந்த எலும்புக்கூடுகளுடன் பல விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எலும்புக்கூட்டின் கழுத்து மற்றும் கால்களில் கட்டப்பட்ட வாளிகளும் இதில் அடங்கும்.
கண்டுபிடிக்கப்பட்ட 107 எலும்புக்கூடுகள், ரோமானியப் பேரரசு முடிவடைந்து இத்தாலியில் மறுமலர்ச்சி தொடங்கியபோது ஐரோப்பாவில் இருண்ட காலத்தை நினைவூட்டுகிறது.
இந்த கல்லறைகளில், ஆராய்ச்சியாளர்கள் கோடாரிகள், கத்திகள், ஈட்டிகள், நகைகள், வளையல்கள் மற்றும் முட்டை ஓடுகள் மற்றும் கோழி எலும்புகள் போன்ற உணவு எச்சங்களை கண்டுபிடித்துள்ளனர்.
இது தவிர வடகிழக்கு ஐரோப்பாவில் ஆண்ட மனிதர்களின் பழங்கால எலும்புகளும் கிடைத்துள்ளன.
இந்த கல்லறையில் பழைய கிறிஸ்தவ சடங்குகள் நடத்தப்பட்டன.
இந்த கல்லறையில் பெண் மற்றும் ஆண் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில், பெண் எலும்புக்கூடுகள் மட்டுமே அலங்கரிக்கப்பட்டுள்ளன.
அன்றைய காலத்தில் பெண்களின் கழுத்தில் வளையம் என்பது ஒருவித சமூக அடையாளமாக இருந்தாலும், மிகவும் ஆச்சரியமான விடயம் என்னவென்றால், அவர்களின் காலில் கட்டப்பட்டிருந்த வாளிகள், மர்மத்தை அதிகப்படுத்தியது.
எலும்புக்கூட்டின் கால்களில் மர வாளிகள் கட்டப்பட்டிருப்பதை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். சில மனிதர்களின் கல்லறைகளில் இந்த மர வாளிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது, வல்லுநர்கள் இந்த வாளிகள் இறுதிச் சடங்கு தொடர்பான சில சடங்குகள் அல்லது நடைமுறைகளுடன் தொடர்புடையதாக இருக்கும் சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
இவை அனைத்தும் 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உயர்மட்ட இராணுவ வீரர்களின் கல்லறைகளாகத் தோன்றுகின்றன. கியேவில் ஏராளமான மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய நேரத்தைப் பற்றி இந்த கல்லறை நிறைய தகவல்களைக் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.