பரிசை சூழ உள்ள எட்டு பிரதான நெடுஞ்சாலைகளும் முடக்கம்! - நான்காவது நாளாக தொடரும் போராட்டம்!!
1 மாசி 2024 வியாழன் 09:02 | பார்வைகள் : 14989
பரிசை நோக்கி வரும் எட்டு பிரதான நெடுஞ்சாலைகளும் இன்று நான்காவது நாளாக முடக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் போராட்டத்துக்கு முடிவு கிடைக்காத நிலையில், உழவு இயந்திரங்கள் மூலம் வீதி முடக்கும் தங்களது போராட்டதை தொடர்கின்றனர்.
A1 நெடுஞ்சாலை Epiais-lès-Louvres (Val d'Oise) நகரின் அருகே முடக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான உழவு இயந்திரங்கள் வீதியை முடக்கியுள்ளன.
A4 நெடுஞ்சாலை Serris மற்றும் Ferrières-en-Brie (Seine-et-Marne) பகுதிகளில் வீதி முடக்கப்பட்டுள்ளன.
A5a, A6, A12, A13, A15, A16 ஆகிய நெடுஞ்சாலைகளும் முடக்கப்பட்டுள்ளன.
திங்கட்கிழமை பிற்பகல் ஆரம்பித்த இந்த சாலை மறியல் போராட்டம், இன்று நான்காவது நாளாக தொடர்கிறது.
நேற்றைய தினம் Rungis சந்தையை முற்றுகையிட்ட 79 பேர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


























Bons Plans
Annuaire
Scan