Paristamil Navigation Paristamil advert login

வீடற்றவர்கள் பற்றி தகவல் சேகரிப்பு அறிக்கையை 'Abbé-Pierre' அமைப்பு வெளியிட்டுள்ளது.

வீடற்றவர்கள் பற்றி தகவல் சேகரிப்பு அறிக்கையை 'Abbé-Pierre' அமைப்பு வெளியிட்டுள்ளது.

1 மாசி 2024 வியாழன் 09:46 | பார்வைகள் : 3198


'Abbé-Pierre' என்னும் தொண்டு அமைப்பு வீடற்றவர்களாக வாழ்பவர்களை, அவர்களின் நிலைப்பாடுகளை கணக்கெடுத்து அதனை அறிக்கையாக சமர்ப்பிக்கும் செயற்பாட்டினை தொடர்ச்சியாக கடந்த சில ஆண்டுகளாக செய்து வருகிறது.  

அதன்படி இவ்வாண்டுக்கான தமது 29வது பதிப்பை 338 பக்கங்களில் அறிக்கையாக நேற்று ''Abbé-Pierre' அமைப்பு வெளியிட்டுள்ளது. 2023ம் ஆண்டில் 330,000 மக்கள் வீடற்றவர்களாக பிரான்ஸ் வீதிகளில் வாழ்கிறார்கள் என அதன் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை 2012 உடன் ஒப்பிடும்போது இரு மடங்கிற்கும் அதிகமாக உள்ளது (அந்த நேரத்தில் 143,000), மேலும் 2001 உடன் ஒப்பிடும்போது மூன்று மடங்கு அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017ல் அதிபர் Emmanuel Macron தன் தேர்தல் பிரச்சாரத்தின் அடையாள வாக்குறுதிகளில் ஒன்றாக தான் ஆட்சிக்கு வந்தால், "ஒரு பிரெஞ்சு நபர் கூட தெருவில் தூங்க மாட்டார்" என தொரிவித்திருந்தது தோல்வி கண்டுவிட்டது என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்