Paristamil Navigation Paristamil advert login

சீனா விமான போக்குவரத்து பாதை மாற்றம் -  கடுமையாக எதிர்க்கும் தைவான்

சீனா விமான போக்குவரத்து பாதை மாற்றம் -  கடுமையாக எதிர்க்கும் தைவான்

1 மாசி 2024 வியாழன் 12:57 | பார்வைகள் : 1320


சீனா விமான போக்குவரத்து பாதையை மாற்றியதற்கு தைவான் கடுமையான எதிர்ப்பை முன்வைத்துள்ளது.

சீனா சமீபத்தில் தங்களுடைய விமான பாதையில் சிறிது மாற்றத்தை அறிவித்தது, அதன்படி தெற்கு நோக்கி செல்லும் விமானங்கள் M503 பாதையில் பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் பயணிக்கும் என அறிவித்தது.

மேலும் இந்த மாற்றத்தின் மூலம் பரபரப்பான இடங்களுக்கான விமான போக்குவரத்து செயல்திறன் அதிகரிக்கும் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனா-தைவான் இடையே ஏற்கனவே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சீனாவின் இந்த விமான போக்குவரத்து மாற்றம் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விமான போக்குவரத்தை பாதையை மாற்றும் சீனாவின் அறிவிப்புக்கு தைவான் புதன்கிழமை எச்சரிக்கை தெரிவித்துள்ளது. 

தைவான் இராணுவ அமைச்சர் தெரிவித்த கருத்தில், இந்த மாற்றம் ஒருதலைபட்சமானது மற்றும் தன்னிச்சையானது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவை இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை அதிகரிக்கும் என்றும் உடனடியாக இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தைவான் போக்குவரத்து அமைச்சர் Wang Kwo-tsai  தெரிவித்த தகவலில், சீனா அறிவித்துள்ள விமான பாதையானது தைவான் விமானங்களின் தகவல் பகுதிக்கு மிக அருகில் உள்ளது.

இரண்டுக்கும் இடையே வெறும் 4.2 கடல் மைல்கள் மட்டுமே இடைவெளி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்