வீதி விபத்தில் 3,170 பேர் பலி! - 3% சதவீதம் வீழ்ச்சி!
1 மாசி 2024 வியாழன் 14:26 | பார்வைகள் : 10755
சென்ற 2023 ஆம் ஆண்டில் பிரான்சில் வீதி விபத்தில் 3,170 பேர் பலியாகியுள்ளனர். சென்ற 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 3% சதவீத வீழ்ச்சியாகும்.
சென்ற ஆண்டு மின்சார ஸ்கூட்டரில் (trottinettes) விபத்துக்குள்ளாகி 42 பேர் பலியாகியுள்ளனர். இது 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7% சதவீதம் அதிகமாகும். மகிழுந்து மற்றும் வாகன விபத்துக்களில் 1,525 பேரும், மோட்டார் சைக்கிள் விபத்தில் 707 பேரும், மிதிவண்டி விபத்தில் 226 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
பாதசாரிகள் 440 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மொத்தமாக 3,170 பேர் சென்ற ஆண்டில் விபத்தில் கொல்லப்பட்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3% சதவீதம் குறைவாகும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan