Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற ஐஸ் போதைப் பொருள்

இலங்கையில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற ஐஸ் போதைப் பொருள்

1 மாசி 2024 வியாழன் 16:34 | பார்வைகள் : 8040


அங்குனுகொலபெலஸ்ஸ சூரியாரா பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனமல்வில தலைமையக பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் பச்சை நிறத்தில் காணப்படுவதுடன், இலங்கையில் முதன்முறையாக இந்த பச்சை ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அங்கு, ஐந்து பாக்கெட்டுகளில் 5 கிராம் எழுபது மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் பொதி செய்யப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் அதே பகுதியைச் சேர்ந்த 63 வயதுடையவர் எனவும் சந்தேகநபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் நாளை ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்