Paristamil Navigation Paristamil advert login

கடலில் மூழ்கிய ரஷ்ய கப்பல்- உக்ரைனின் அதிரடி தாக்குதல் 

கடலில் மூழ்கிய ரஷ்ய கப்பல்- உக்ரைனின் அதிரடி தாக்குதல் 

1 மாசி 2024 வியாழன் 16:34 | பார்வைகள் : 3448


உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் இரண்டாவது ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. 

இரு நாடுகளுக்கு இடையிலான போர் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்துச் செல்கின்றது.

இந்நிலையில் ரஷ்யாவின் இவானோவெட்ஸ்(Ivanovets) என்ற ஏவுகணை கப்பலை உக்ரைனின் முக்கிய புலனாய்வு இயக்குநரகம் திடீர் தாக்குதல் நடத்தி அழித்துள்ளது.

கடலில் மூழ்கிய ரஷ்யாவின் போர் கப்பல் ஜனவரி 31ம் திகதிக்கும்  பிப்ரவரி 1ம் திகதிக்கும் இடைப்பட்ட இரவில் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவின் கடல் பகுதியில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவானோவெட்ஸ்(Ivanovets) மூழ்கடிக்கப்பட்டதன் மூலம் ரஷ்யாவிற்கு 60 முதல் 70 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

முதல்நிலை தகவலின் படி, இவானோவெட்ஸ்(Ivanovets) கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பிறகு ரஷ்யா தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டதாகவும், 

ஆனால் அது வெற்றிகரமாக முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்