நிரம்பி வழியும் பிரெஞ்சு சிறைச்சாலைகள்! - இதுவரை இல்லாத அளவு பதிவு!!

1 மாசி 2024 வியாழன் 17:57 | பார்வைகள் : 10192
பிரெஞ்சு சிறைச்சாலைகளில் இதுவரை இல்லாத அளவு அதிகளவான கைதிகளால் நிறைந்து வழிகிறது. சென்ற ஆண்டை விட 5% சதவீதத்துக்கும் அதிகமாக கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
ஜனவரி 1 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டஆய்வின் படி 72,173 கைதிகள் பிரெஞ்சு சிறைச்சாலைகளில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில் 5.2% சதவீதம் அதிமாகும்.
60,975 கைதிகளுக்கான இடவசதி மட்டுமே பிரெஞ்சு சிறைச்சாலைகளில் உள்ள நிலையில், இந்த மேலதிக கைதிகளால் சிறைச்சாலைகள் போதிய சுகாதாரமற்று காணப்படுகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், பிரான்சில் 15,000 கைதிகளுக்கான சிறைச்சாலைகள் உருவாக்கப்படும் என உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1