விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! - பிரதமர் கேப்ரியல் அத்தால் புதிய அறிவிப்புகள்!
2 மாசி 2024 வெள்ளி 05:59 | பார்வைகள் : 4585
விவசாயிகளின் தொடர் போராட்டங்களை அடுத்து, பிரதமர் கேப்ரியல் அத்தால் நேற்று வியாழக்கிழமை சில அறிவித்தல்களை வெளியிட்டார்.
பிரெஞ்சு விவசாயிகளுக்கான சில சலுகைகளை அதில் குறிப்பிட்டார். அவர்களுக்கு 150 மில்லியன் யூரோக்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அவை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
விவசாயிகளின் நன்மை கருதி உருவாக்கப்பட்ட Egalim law சட்டத்தினை மேலும் வலுவாக்கப்படும் எனவும் பிரதமர் உறுதியளித்தார். ‘ உள்ளூர் உற்பத்திகளை விடவும் உக்ரேனில் இருந்து அதிகளவாக விவசாயப்பொருட்கள், தானியங்கள் இறக்குமதி செய்யப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு பிரான்சில் உள்ள பல்பொருள் அங்காடிகளுக்கும்- விநியோகஸ்தர்களுக்கும் இடையே அரசு இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்தி, உள்ளூர் விளைபொருட்களுக்கான சந்தையை அதிகளவில் ஏற்படுத்திக்கொடுக்கும் எனவும் உறுதியளித்தார்.
அதேவேளை, இளம் விவசாயிகளை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.