Paristamil Navigation Paristamil advert login

தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெறுகிறதா?

தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெறுகிறதா?

2 மாசி 2024 வெள்ளி 07:47 | பார்வைகள் : 1120


நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான தி.மு.க. தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து தி.மு.க. தலைமை தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தி.மு.க. கூட்டணியில் கோவை மற்றும் தென் சென்னை தொகுதிகளை கேட்க மக்கள் நீதி மய்யம் முடிவு செய்துள்ளது.

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கோவை அல்லது தென் சென்னை தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாளை, நாளை மறுநாள் சென்னை, கோவை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்