Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் இருந்து இலங்கை சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

அமெரிக்காவில் இருந்து இலங்கை சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

2 மாசி 2024 வெள்ளி 07:54 | பார்வைகள் : 5644


அமெரிக்க யுவதி ஒருவரை துஷ்பிரயோகம் செய்து இவருடைய தங்க நகைகளை அபகரித்த குற்றச்சாட்டில் சுற்றுலா வழிகாட்டி உட்பட இருவரை கண்டி குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இலங்கைக்கு விஜயம் செய்த 25 வயதுடைய அமெரிக்க யுவதியிடமிருந்து தங்க நகைகள் மற்றும் டொலர்கள் என்பன அபகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 29 ஆம் திகதி கண்டி தங்குமிடம் ஒன்றில்  தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக குறித்த யுவதி நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதன் அடிப்படையில் இவர்கள் கைதாகினர். 

மேலும் யுவதியை  மருத்துவரிடம் அனுப்பி அறிக்கை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தடயவியல் மருத்துவரிடம் அறிக்கை பெற யுவதி மறுத்து விட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இவரிடமிருந்து  2,400 அமெரிக்க டொலர்கள்  3,600 அமெரிக்க டொலர் பெறுமதியான  தங்க நகைகள் என்பன அபகரிக்கப்பட்டுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்