Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் மக்களுக்கு எதிராக செயற்படும் இஸ்லாமியர்கள்...

இஸ்ரேல் மக்களுக்கு எதிராக செயற்படும் இஸ்லாமியர்கள்...

2 மாசி 2024 வெள்ளி 08:08 | பார்வைகள் : 6269


இஸ்ரேல் நாட்டில் ஷபாரம் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய  அரேபிய-இஸ்ரேலியரான ரஜி  ஹமடா, கடந்த டிசம்பர் மாத இறுதியில், போக்குவரத்து பொலிஸாரின் வாகன சோதனையின்போது முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாததற்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஆனால், அவர் பொலிஸாரிடம் தெரிவிக்கையில், ஹைபா பகுதியில் உள்ளரசாயன தொழிற்சாலை ஒன்றை தீ வைத்து எரிக்கவும் மற்றும் பொலிஸ்  நிலையம் ஒன்றை கொளுத்தவும் திட்டமிட்டிருந்தேன் என கூறி அவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.

ஹைபா பே பகுதியில் சுத்தகரிப்பு ஆலைகள் மற்றும் ரசாயன தொழிற்சாலைகள் நிறைய உள்ளன.

இஸ்ரேலுக்கான பெருமளவிலான பிளாஸ்டிக்குகள் இந்த பகுதியிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை முற்றிலும் ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ள சூழலில், அதுபற்றி அரபு செய்தி சேனல்களில் வெளிவர கூடிய செய்திகளை பார்த்து அதன்மீது ஹமடா ஈர்க்கப்பட்டுள்ளார்.

காசா போர் பற்றிய செய்திகளை பார்த்து, அவர் இதுபோன்ற திட்டமிடலில் ஈடுபட்டு உள்ளார்.

கடந்த டிசம்பரில், ஷபாரம் பகுதியில் உள்ள பொலிஸ்  நிலையம் ஒன்றின் மீது எரிகுண்டு ஒன்றை வீசியதற்காக ஹமடா கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

இந்நிலையில், ஹைபா மாவட்ட நீதிமன்றத்தில் ஹமடா மீது குற்றச்சாட்டு ஒன்றுபதிவு செய்யப்பட்டு உள்ளமைக் குறிப்பிடத்தக்கதாகும்.


 

வர்த்தக‌ விளம்பரங்கள்