Paristamil Navigation Paristamil advert login

ரோஹித் சர்மாவை கடுமையாக விமரிசித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் 

ரோஹித் சர்மாவை கடுமையாக விமரிசித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் 

2 மாசி 2024 வெள்ளி 08:45 | பார்வைகள் : 1326


ரோஹித் சர்மாவை கடுமையாக விமரிசித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

இதனால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா குறித்த விமர்சனங்கள் அதிகரிக்கத் தொடங்கியது.

இந்நிலையில், ரோஹித் சர்மாவை கடுமையாக விமரிசித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

''இந்திய டெஸ்ட் அணி விராட் கோலியின் கேப்டன்சியை பெரிதும் இழந்துள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி கேப்டனாக செயல்பட்டிருந்தால் நிச்சயம் இந்திய அணி தோல்வியைத் தழுவி இருக்காது.

ரோகித் சர்மா ஒரு ஜாம்பவான் வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் தற்போது செயலிழந்து விட்டதாக உணர்கிறேன்.

மேலும் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் மிகமிக சராசரியாக இருந்ததாக நான் கருதுகிறேன்.

களத்தில் அவர் சரியான திட்டங்களை தீட்டியதாகவோ அல்லது பந்து வீச்சு மாற்றங்களில் முனைப்புடன் இருந்ததாகவோ எனக்கு தெரியவில்லை'' என்று வாகன் தெரிவித்தார்.  

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்