சினிமாவிலிருந்து விலகுகிறார் நடிகர் விஜய்...
2 மாசி 2024 வெள்ளி 10:00 | பார்வைகள் : 10491
அரசியல் கட்சியை அறிவித்துள்ள நடிகர் விஜய் ஒப்புக் கொண்ட படங்களை முடித்து விட்டு சினிமாவில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார்.
நடிகர் விஜய் இன்று தமிழக வெற்றிக் கழகம் என தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். கட்சியைப் பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு விண்ணப்பித்துள்ளதாகவும் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார் விஜய். இடைப்பட்ட இந்த காலத்தில் தனது கட்சியை வலுப்படுத்தப் போவதாகவும் கூறியுள்ளார். இதுமட்டுமல்லாது, ஒப்புக் கொண்டுள்ள படங்களை முடித்துவிட்டும் அவர் சினிமாவை விட்டு விலகுவதாகவும் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘GOAT' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கடுத்து ‘தளபதி 69’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விஜய். இந்த இரண்டு படங்களை முடித்துக் கொடுத்து விட்டு, சினிமாவில் இருந்து விலகுவதாகக் கூறியுள்ளார் விஜய். பின்பு முழுமையாக அரசியல் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். விஜய் கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்காக புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் டெல்லிக்கு வருகை புரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan