Paristamil Navigation Paristamil advert login

விஜய் கட்சியின் பெயரில் ’வெற்றியை’ வைத்ததன் காரணம் இதுவா?

விஜய் கட்சியின் பெயரில் ’வெற்றியை’ வைத்ததன் காரணம் இதுவா?

2 மாசி 2024 வெள்ளி 10:13 | பார்வைகள் : 1034


நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை அதிகார்பூர்வமாக அறிவித்துள்ளார். ‘தமிழக வெற்றி கழகம்’ என தனது அரசியல் கட்சியின் பெயரை இன்று அறிவித்தார் நடிகர் விஜய்.

தனது அரசியல் பயணத்தை எப்போது நடிகர் விஜய் அறிவிப்பார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இன்று அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறார் நடிகர் விஜய். அவர் தனது அரசியல் கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ எனப் பெயர் சூட்டி இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும்.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின், வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள்,கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும்’ என குறிப்பிட்டுள்ளார்.

விஜய் விரைவில் கட்சிப் பெயரை அறிவிக்கப் போகிறார் என்ற தகவல் வந்ததுமே அதன் பெயர் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருந்தது. அது, ‘தமிழக முன்னேற்ற கழகம்’ எனவும் சொல்லப்பட்டது. ஆனால், இப்போது ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளார் விஜய்.

கட்சியிலேயே வெற்றியைக் கொண்டுள்ள விஜய் இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்ததற்கு சில சென்டிமென்ட் காரணங்களும் சொல்கிறார்கள். அதாவது, பெயரிலேயே வெற்றி இருக்க வேண்டும் என்றுதான் அவருக்கு விஜய் எனப் பெயர் வைத்தார் இயக்குநர் சந்திரசேகர். அதேபோல, விஜய் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான முதல் படத்தின் பெயரும் ‘வெற்றி’தான். இதுபோன்ற விஷயங்களை மனதில் வைத்தே கட்சியின் பெயரிலும் அவர் ‘வெற்றியை’ சேர்த்திருக்கிறார் என்கின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்