Paristamil Navigation Paristamil advert login

 ஜோ பைடனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்  மக்கள் கூட்டம்

 ஜோ பைடனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்  மக்கள் கூட்டம்

2 மாசி 2024 வெள்ளி 10:17 | பார்வைகள் : 6506


அமெரிக்காவின் மிச்சிகன் நகருக்கு சென்ற ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் ஒன்று திரண்டுள்ளாக தகவல் வெளியாகியுள்ளது.

மிச்சிகன் நகருக்கு ஜனாதிபதி ஜோ பைடன் வருகை தந்த போது பாலஸ்தீன ஆதரவாளர்கள் பலர் கையில் பதாகைகளுடன் அவருக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

அவர்கள், 'பைடன் பைடன் உங்களை பார்க்க முடியவில்லை, நீங்கள் கொலைக் களத்தில் இருக்கிறீர்கள்' என்று கூச்சலிட்டனர். 

அத்துடன் ஜோ பைடன் இனப்படுகொலையை ஆதரிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். 

சிலரின் பதாகைகளில், ஏமனை கைவிட்டு, பொதுத்தேர்தலில் அவருக்கு வாக்களிக்க மாட்டோம் என்று எழுதியிருந்தனர்.

எனினும் கலகத் தடுப்புப் பொலிஸார் அவர்களை சுற்றி வளைத்து தடுத்தனர். 

மிச்சிகனுக்கு பிரச்சார பயணத்தில் ஜோ பைடன் தொழிற்சங்க ஊழியர்களை சந்தித்தார்.

ஆனால் அவரால், காசாவில் போர் மற்றும் மத்திய கிழக்கில் சுழலும் பதற்றங்கள் பற்றிய சர்ச்சையில் இருந்து தப்பிக்க முடியவில்லை. 

வர்த்தக‌ விளம்பரங்கள்