Paristamil Navigation Paristamil advert login

வெண்டைக்காய் வறுவல்'

வெண்டைக்காய் வறுவல்'

2 மாசி 2024 வெள்ளி 12:50 | பார்வைகள் : 1379


வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புசத்துகள் ஆகியவை உள்ளன. வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளர்ச்சி உண்டாகும், மேலும் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இவற்றில் அனைவரும் விரும்பி சாப்பிடுவது ‘வெண்டைக்காய் வறுவல்’ தான். இதை வழு வழுப்பு இல்லாமல் மொரு மொருவென்று எவ்வாறு வெண்டைக்காய் வறுவல் செய்யலாம் என்று இங்கே காணலாம்.

தேவையான பொருட்கள் :

வெண்டைக்காய் - 300 கிராம்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் - 1/2

கடுகு - 1/2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 4

பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்

தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

பூண்டு - 3 - 5 பல்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

மிளகு - 1/2 டீஸ்பூன்

இலவங்கப்பட்டை - 2

கிராம்பு - 3

மஞ்சள் தூள் - சிறிதளவு

உப்பு - சுவைக்கேற்ப

கருவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை :

அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்துக்கொள்ளவும்.

கடுகு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

பின்னர் நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காய் சேர்த்து 10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் நன்றாக வதக்கிக்கொள்ளவும்.

குறிப்பு : வெண்டைக்காயை அடிக்கடி கிளறிவிட்டுக் கொண்டே இருக்கவும்.

இதற்கிடையே ஒரு மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய், இலவங்கப்பட்டை, கிராம்பு, பூண்டு, பொட்டுக்கடலை, சீரகம், மிளகு, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

வெண்டைக்காய் ஓரளவிற்கு நன்றாக வதங்கியவுடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த வெண்டைக்காயை 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைத்து சமைத்து இறக்கினால் சுவையான ‘வெண்டைக்காய் வறுவல்’ ரெடி.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்