Paristamil Navigation Paristamil advert login

நமது அரசாங்கத்தின் மூன்றாவது ஆட்சியில், நம் நாடு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் - பிரதமர் மோடி

நமது அரசாங்கத்தின் மூன்றாவது ஆட்சியில், நம் நாடு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் - பிரதமர் மோடி

2 மாசி 2024 வெள்ளி 14:41 | பார்வைகள் : 1805


டெல்லியில் நடைபெற்ற  2024ம் ஆண்டுக்கான பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

இந்த அற்புதமான நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக நான் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ-வுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இன்று என்னால் அனைத்து ஸ்டால்களுக்கும் செல்ல முடியவில்லை, ஆனால் நான் பார்த்த ஸ்டால்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன. 

இதெல்லாம் நம் நாட்டில் நடப்பது நமக்கு மகிழ்ச்சியான தருணம். நான் இதுவரை கார் வாங்கியதில்லை, அதனால் எனக்கு அது குறித்த அனுபவம் இல்லை, நான் சைக்கிள் கூட வாங்கியதில்லை. இந்த கண்காட்சியை டெல்லி மக்கள் அனைவரும் வந்து பார்க்க வேண்டும். எனது முதல் பதவிக்காலத்தில் நான் ஒரு உலக அளவிலான மொபிலிட்டி மாநாட்டைத் திட்டமிட்டிருந்தேன். எனது இரண்டாவது பதவிக்காலத்தில், நான் நிறைய முன்னேற்றம் காணப்படுவதைக் காண்கிறேன், எனது மூன்றாவது பதவிக்காலத்தில் அதை நான் நம்புகிறேன்.


இன்றைய பாரத் (இந்தியா) வரும் 2047க்குள் 'விக்சித் பாரத்' என்ற நிலைக்கு முன்னோக்கி நகருகிறது. இந்த இலக்கை அடைய, மொபிலிட்டி  துறை முக்கியப் பங்காற்றப் போகிறது. செங்கோட்டையின் அரண்களில் இருந்து, 'யாஹி சமய், சாஹி சமய் ஹை' என்றேன். நாட்டு மக்களின் திறமையால் நான் அந்த வார்த்தைகளை உச்சரித்தேன். இன்று இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக விரிவடைந்து வருகிறது, நமது அரசாங்கத்தின் மூன்றாவது ஆட்சியில், நம் நாடு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.


இவ்வாறு அவர் கூறினார். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்