Paristamil Navigation Paristamil advert login

இல் து பிரான்சின் சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டன! - அடுத்தவாரத்தில் போராட்டம் தொடரும் என அறிவிப்பு!

இல் து பிரான்சின் சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டன! - அடுத்தவாரத்தில் போராட்டம் தொடரும் என அறிவிப்பு!

3 மாசி 2024 சனி 06:06 | பார்வைகள் : 5680


பரிசில் இருந்து வெளிச்செல்லும் நெடுஞ்சாலைகளை முடக்கி வைத்திருந்த விவசாயிகள், தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர். வீதிகள் திறக்கப்பட்டுள்ளன.

A6, A15 மற்றும் A16 ஆகிய நெடுஞ்சாலைகள் நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் முதல் திறக்கப்பட்டுள்ளன. அதேபோல் A6 நெடுஞ்சாலையும் திறக்கப்பட்டுள்ளன.

கடந்த திங்கட்கிழமை பிற்பகல் முதல் வீதி முடக்க போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், தற்போது கலைந்து சென்றுள்ளனர்.

மீண்டும் அடுத்த வாரத்தில் அவர்கள் வீதி முடக்கத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ”அரசாங்கம் தனது வாக்குறுதியை நிறைவேற்ற தவறினால், மீண்டும் வீதிகளை முடக்குவோம்!” என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்