கிளிநொச்சியில் குடும்பஸ்தர் ரயிலில் மோதுண்டு பலி

3 மாசி 2024 சனி 06:07 | பார்வைகள் : 5950
கிளிநொச்சியில் பாதுகாப்பு கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ரயிலில் மோதுண்டதில் பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (02) பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி டிப்போ வீதியில் தொடருந்து நிலையத்துக்கு அண்மித்துள்ள பாதுகாப்பான தொடருந்து கடவை மூடப்பட்ட நிலையில், குறித்த கடவையை கடக்க முற்பட்டவரையே தொடருந்து மோதியுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் தொடருந்து கடவையை கடக்க முயன்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1