விவசாயிகள் வீதி முடக்கம்! - மகிழுந்துக்குள் வைத்து குழந்தை பெற்றெடுத்த பெண்!

3 மாசி 2024 சனி 07:18 | பார்வைகள் : 9281
கர்பிணி பெண் ஒருவர் தனது பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில், விவசாயிகள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
இச்சம்பவம் பெப்ரவரி 1 ஆம் திகதி Trégunc (Finistère) நகரில் இடம்பெற்றுள்ளது. Johanne Le Gallic எனும் 26 வயதுடைய நிறைமாத கர்பிணி பெண் ஒருவர் தனது கணவருடன் மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருந்த போது, வீதி முடக்கப்பட்டிருப்பதை பார்த்து அவரது கணவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
போக்குவரத்து தடையை சரிசெய்வதற்குள் அவருக்கு பிரசவ வலி எடுத்துள்ளது.
பிரசவ வலி அதிகமாக, அவரை மருத்துவமனைக்கு சொண்டுசெல்வது சாத்தியமில்லாத ஒன்று என தெரியவந்துள்ளது. அதையடுத்து அவரை மகிழுந்தின் பின் இருக்கையில் அமரச் செய்து, அருகில் இருந்த பலரது உதவியுடன் அவர் குழந்தை ஒன்றை பிரசவித்தார்.
ஆண் குழந்தை ஒன்று நலமுடன் பிறக்க, பின்னர் ஒருமணிநேரம் தாமதமாக தாயும் சேயும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1