Paristamil Navigation Paristamil advert login

வீதிகளை புனரமைக்க ஒரு மில்லியன் யூரோக்கள் செலவு! - Brittany நகரசபை!

வீதிகளை புனரமைக்க ஒரு மில்லியன் யூரோக்கள் செலவு! - Brittany நகரசபை!

3 மாசி 2024 சனி 09:00 | பார்வைகள் : 2301


விவசாயிகள் போராட்டத்தில் சேதமாக்கப்பட்ட வீதிகளை புனரமைக்க ஒரு மில்லியன் யூரோக்கள் செலவிட தயாராகிறதாக Brittany நகரசபை அறிவித்துள்ளது.

கடந்த பத்து நாட்களாக இடம்பெற்ற விவசாயிகளின் ஆர்பாட்டத்தின் போது, Brittany நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. வீதிகளில் உழவு இயந்திரங்களை நிறுத்தி போக்குவரத்துக்களை முடக்கி பெரும் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர். வாகனங்களை சேதமாக்கியதுடன், வீதிகளையும் சேதமாக்கியிருந்தனர்.

வீதிகளை பராமரிக்கும் Frédéric Lechelon நிறுனம் மீண்டும் வீதிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக ஒரு மில்லியன் யூரோக்கள் செலவாகும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான தொகையை Brittany
நகரசபையிடம் இருந்து அறவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்