சுவிட்சர்லாந்தில் விரைவுக் குடியுரிமை பெற விரும்புவோருக்கு புதிய நடைமுறை
3 மாசி 2024 சனி 07:49 | பார்வைகள் : 13170
சுவிட்சர்லாந்தில் பல புலம்பெயர்தோர் குடியுரிமைகளை பெறுவதற்கு ஆர்வத்தை காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்கள், தாங்கள் விரைவுக் குடியுரிமை பெற தகுதியுடையவர்களா என்பதை அறிந்துகொள்வதற்காக புதிய நடைமுறை ஒன்றை அரசு அறிமுகம் செய்துள்ளது.
புலம்பெயர்தலுக்கான சுவிஸ் மாகாணச் செயலகம், ‘naturalisation self-check' என்னும் புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது.
தாங்கள் சுவிஸ் விரைவுக் குடியுரிமை பெறத் தகுதியானவர்களா என அறிய விரும்பும் வெளிநாட்டவர்களுக்காக ஒன்லைன் கேள்வித்தாள் ஒன்றை உருவாக்கியுள்ளது அந்த அலுவலகம்.
உங்கள் திருமண நிலை, நிங்கள் எவ்வளவு காலமாக சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வருகிறீர்கள் என்பது முதலான பல கேள்விகள் அந்த கேள்வித்தாளில் இடம்பெற்றிருக்கும்.
அந்தக் கேள்விகளுக்கு நீங்கள் அளிக்கும் பதில்கள் மூலம், நீங்கள் சுவிஸ் விரைவுக் குடியுரிமை பெறத் தகுதியுடையவர்கள் என முடிவு செய்யப்படும் நிலையில், உங்களுக்கு சுவிஸ் விரைவுக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவம் வழங்கப்படும்.
இப்போதைக்கு, சுவிஸ் விரைவுக் குடியுரிமை பெறுபவர்களுக்காக மட்டுமே இந்த ’சுயபரிசோதனை’ கேள்விகள் வழங்கப்படுகின்றன.
சாதாரண முறை குடியுரிமை பெறுபவர்களுக்காக அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

























Bons Plans
Annuaire
Scan