தோலின் நிறமிகள் இழக்கப்பட்டு வெள்ளையாக மாறும் 'vitiligo' நோய்க்கு நிவாரணம். Assurance maladie பச்சை கொடி.
3 மாசி 2024 சனி 08:03 | பார்வைகள் : 6005
'Vitiligo' என்னும் இந்த சரும பாதிப்பு, தோலின் நிறமிகள் இழக்கப்பட்டு வெள்ளையாக மாறுவதால் ஏற்படும் பாதிப்பாகும். இது தோலின் நிறமி செல்கள் இறப்பதால் அல்லது தொடர்ந்து வேலை செய்ய முடியாமல் போவதால் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு உடலில் ஏற்படுவதற்கான தெளிவான ஒரு காரணம் மட்டும் இல்லை என்றாலும், மரபணு, விஷத்தன்மை உடைய அழுத்தம், நரம்பு மண்டலப் பாதிப்பு அல்லது வைரஸ் போன்ற காரணங்கள் ஏற்படுகிறது.
குறித்த இந்த பதிப்பில் இருந்து விடுபட புதிய 'Opzelura' என்னும் கிரீம் பிரான்சில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது உடலின் சகல பகுதிகளிலும் உள்ள சருமத்தில் இழந்த நிறத்தினை மீளவும் கொண்டு வருவதுடன் முகத்தின் சருமங்களில் மிகச்சிறப்பாக செயல்படுகிறது என தோல் மருத்துவத் துறையின் தலைவரும் பேராசிரியருமான Thierry Passeron தெரிவித்துள்ளார்.
12 வயதுக்கு மேற்பட்டவர்களில் இருந்து குறித்த மருந்தை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது, ஆறு மாதங்களில் இருந்து 24 மாதங்கள் வரை குறித்த மருந்தை பயன்படுத்துவதன் மூலம் முழுமையான மாற்றத்தை பெற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
'Vitiligo' பதிப்புக்கான 'Opzelura' கிரீமை மருத்துவமனைகளின் மருந்தகங்களில் பெற்றுக் கொள்ளலாம். 'Opzelura' மருந்தை பயன்படுத்த அரச மருத்துவ காப்புறுதி (Assurance-maladie) பச்சைக் கொடி காட்டியுள்ளதால், காப்புறுதி விலைக்கழிவுடன், மருத்துவர்களின் மருந்துச் சீட்டுடன் குறித்த மருந்தினை பெற்றுக்கொள்ள முடியும்.