Paristamil Navigation Paristamil advert login

◉ gare de Lyon தொடருந்து நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல்! - ஒருவர் கைது!

◉ gare de Lyon தொடருந்து நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல்! - ஒருவர் கைது!

3 மாசி 2024 சனி 08:30 | பார்வைகள் : 7897


gare de Lyon  தொடருந்து நிலையத்தில் இன்று சனிக்கிழமை காலை கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் பயணிகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

காலை 8 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் பயணிகள் மீது கத்தி மூலம் கண்மூடித்தமாக தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இச்சம்பவத்தில் *மூவர் காயமடைந்துள்ளனர். 

உடனடியாக சம்பவ இடத்தில் காவல்துறையினர் தலையிட்டு, தாக்குதலாளியை கைது செய்தனர். 

1992 ஆம் ஆண்டு பிறந்த ஒருவரே தாக்குதல் மேற்கொண்டுள்ளார். அவர் ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியைச் சேர்ந்தவர் என அறிய முடிகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்