காசாவில் போர்க் கொடூரம்.... மக்கள் எதிர்நோக்கும் அவலநிலை
3 மாசி 2024 சனி 08:34 | பார்வைகள் : 2961
இஸ்ரேலானது ஹமாஸ் அமைப்பை முற்றாக அழிப்பதாக கூறி காசா பிரதேசத்தின் மீது பாரிய தாக்குதலை நடத்தி வருகின்றது.
பாதுகாப்பற்ற இடங்களில் பிளாஸ்டிக் கவர்களால் கூடாரங்களை அமைத்து பாலஸ்தீனக் குடிமக்கள் தங்கிவருகிறார்கள்.
மத்திய காஸாவிலுள்ள அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையின் மைதானத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் முகாமிட்டிருக்கிறார்கள்.
கடும் குளிரிலும், மழையிலும், வெள்ளத்திலும் போதிய மருத்துவச் சிகிச்சை, உணவு, தண்ணீர் இல்லாமல் பெரும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
காஸாவின் உள்கட்டமைப்பு பெரிதும் சிதைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் காஸாவில் உள்ள சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,``நான்கு மாதங்களாக நடைபெற்று வரும் போரில் குறைந்தது 27,019 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்" எனத் தெரிவித்திருக்கிறது.
இதற்கிடையில், காஸாவின் எல்லையில், இஸ்ரேலின் போருக்கு எதிரான போராட்டம் தொடந்துகொண்டிருக்கிறது.
இஸ்ரேலிய தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பாலஸ்தீனியர்கள், கடுமையான சித்ரவதை, பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றின் கொடூர நினைவுகளை பகிர்ந்துகொண்டது தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.